விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"நாட்டின் மறுசீரமைப்புக்கான ஒரு மாபெரும் தேசிய இயக்கம்" என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் வேண்டுகோளை, மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் வலியுறுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 9:05PM by PIB Chennai

நாட்டின் வளங்களை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று  பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, மத்திய வேளாண்அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில், புது தில்லியில் உள்ள கிரிஷி பவனில் வியாழக்கிழமையன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய வேளாண் அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் நில வளத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திரு சௌஹான், தேசிய நலனே பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எப்போதும் முதன்மையானதாகத் திகழ்ந்து வருவதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு அவர் தொடர்ந்து முடிவுகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் நாட்டு மக்களுக்கு எப்போதெல்லாம் வேண்டுகோள் விடுக்கிறாரோ, அது  தேசிய நலன் சார்ந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த பரந்த ஒன்றாக அமைவதாகவும், அதனை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த பல்வேறு வேண்டுகோள்களைச் செயல்படுத்துவது குறித்தும், அமைச்சர் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார். அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும், உள்நாட்டுப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து குடும்பங்களையாவது, உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 'உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்' மற்றும் 'சுதேசி இயக்கம்' ஆகிய முன்னெடுப்புகளின் கீழ், உள்ளூர் தயாரிப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும் அவசியமற்ற சூழலில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு அதிகாரியும் குறைந்தது வேறு ஐந்து பேராவது தங்கம் வாங்காமல் இருப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் திரு சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261224&reg=3&lang=2

**

TV/SV/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2261374) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Kannada