ஆயுஷ்
ஆயுஷ் டிஜிட்டல் சேவைகளை வலுப்படுத்த, மத்திய ஆயுஷ் அமைச்சகம் - டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 5:53PM by PIB Chennai
மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழித் தொழில்நுட்பத்தின் மூலம், ஆயுஷ் அறிவுசார் அமைப்புகளைப் பல்வேறு இந்திய மொழிகளில் விரைவாகப் மொழிபெயர்க்க வழிவகை செய்வதற்காக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கும், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவுக்கும் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது.
“பாஷினி ராஜ்யம் – ஒரு பாஷினி சஹயோகி திட்டம்” என்ற தலைப்பிலான இந்த முன்னெடுப்பின் கீழ், இந்தியாவின் தேசிய மொழி டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பான பாஷினி தளத்தை, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மற்றும் சேவைகளில் ஒருங்கிணைப்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம், இத்தகைய முன்னெடுப்பின் மூலம், சுகாதாரம், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, மருந்து நிர்வாகம் மற்றும் அது தொடர்பான துறைகளில் பணியாற்றி வருகிறது. பரந்த அணுகலையும் மக்களைச் சென்றடைதலையும் உறுதி செய்யும் பொருட்டு, ஆயுஷ் கிரிட் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு இணையதளங்கள், செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகள், இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள் அனைத்திலும் கிடைக்கச் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261095®=3&lang=1
(Release ID: 2261095)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261210)
வருகையாளர் எண்ணிக்கை : 3