ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஜவுளி மறுசுழற்சி குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைக்கான மறுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 10:27AM by PIB Chennai

நாட்டில் பானிபட் (ஹரியானா) போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ஜவுளி மறுசுழற்சியை சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச ஊடக அறிக்கை, இந்தியாவில் உள்ள ஜவுளி மறுசுழற்சி சூழல் அமைப்பு பிரிவுகளுடன் தொடர்புடைய சூழல் மற்றும் தொழில்சார் அம்சங்களின் மீது கவனம் செலுத்தியுள்ளது. எந்தவொரு தொழில்துறை சூழலிலும் அவ்வப்போது விதிமீறல் நிகழ்வுகள் ஏற்படும் என்றாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் மீது இத்தகையக் குற்றச்சாட்டுகளை கூறுவது ஒருதலைபட்சமானதும், தவறானதுமாகும். இது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுங்குமுறை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப அணுகல் மற்றும் நீடித்த தன்மை சார்ந்த தலையீடுகளை பிரதிபலிப்பதாக இல்லை.

ஜவுளிப் பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல், மறுவேலைப்பாடு, மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கான நீண்டகாலமாக நிறுவப்பட்ட மதிப்பு சங்கிலிகளால் ஆதரிக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஜவுளி மீட்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ளது என்பதை இங்கே குறிப்பிடலாம்.

ஜவுளிக் கழிவுகளைப் பெரும்பாலும் நிலத்தில் புதைக்கும் பல்வேறு நாடுகளைப்போலின்றி இந்தியாவில் ஜவுளி கழிவுகளில் பெரும்பகுதி முறையான மற்றும் முறைசார் அமைப்புகள் மூலம் மீட்கப்பட்டு, இரண்டாம் நிலைப் பயன்பாடு, தொழில்துறை பயன்பாடு மற்றும் அதுசார்ந்த பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் ஜவுளி அமைச்சகம் அளித்துள்ள ஜவுளிக் கழிவுகள் விநியோகச் சங்கிலியின் அறிக்கையின்படி, உற்பத்தி நிலையில் உருவாகும் கழிவுகளும், பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியப்படும் கழிவுகளும்  சேர்த்து ஆண்டுக்கு சுமார் 7,073 கிலோ டன் அளவிலான ஜவுளிக் கழிவுகள் உருவாகிறது. 

உற்பத்தி நிலையில் உருவாகும் கழிவுகளில் சுமார் 97 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260895&reg=3&lang=1

***

SS/IR/RJ/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2260972) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam