வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிம்பர்லி ஆலோசனைக் கூட்டத்தை இந்தியா மும்பையில் நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAY 2026 11:19AM by PIB Chennai

இந்திய தலைமையின் கீழ் கிம்பர்லி ஆலோசனைக் கூட்டம்   மும்பையில் தொடங்கியது. 2026 மே 11 அன்று தொடங்கிய இக்கூட்டம் மே 14 வரை நடைபெறுகிறது. இயற்கை வைரங்களில் உலகளாவிய வர்த்தகம் தொடர்பான முக்கிய விவகார  ங்கள் குறித்த விவாதிக்க உலக நாடுகளைச் சேர்ந்த கிம்பர்லி நடைமுறை பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளை இக்கூட்டம் ஒருங்கிணைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சுசிந்திரா மிஸ்ரா, வைரங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் வைர வர்த்தகத்தை வலுப்படுத்துவது, வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், அமைதிக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் கிம்பர்லி ஆலோசனைக் கூட்டம் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போது 86 நாடுகளின் 60 பிரதிநிதிகள் கிம்பர்லி ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளனர்.  உலகளாவிய வைரத்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2026 ஜனவரி 1-ல் கிம்பர்லி ஆலோசனைக் கூட்டம தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260137&reg=3&lang=1

***

SS/IR/KPG/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2260310) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam