உள்துறை அமைச்சகம்
பாபா பந்தா சிங் பகதூர் ஜியின் வெற்றி தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 11:07AM by PIB Chennai
பாபா பந்தா சிங் பகதூர் ஜியின் வெற்றி தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நம்பிக்கை மீதான மாறாத பற்றுக்கும், தாய்நாட்டின் மீதான முழுமையான அர்ப்பணிப்புணர்வுக்கும், அநீதிக்கு எதிரான அசாத்திய துணிச்சலுக்கும் வடிவமாக பாபா பந்தா சிங் பகதூர் ஜி திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பாபா பந்தா சிங் பகதூர் ஜி மனதளவில் ஒரு துறவியாகவும், நம்பிக்கையின் மீது உறுதியான நிலைப்பாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர் என்று தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளை ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிராக போராடியவர் என்றும், சுயமரியாதை, துணிச்சல், நம்பிக்கை என்ற காலத்தால் அழியாத நற்பண்புகளை உலகுக்கு அளித்தவர் என்றும் உள்துறை அமைசச்ர் தெரிவித்துள்ளார். எண்ணற்ற கொடுமைகளை தாங்கிக்கொண்ட போதிலும், மத மாற்றத்தை ஒருபோதும் அவர் ஏற்றுக்கொண்டதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தேசம் மற்றும் நம்பிக்கையை காப்பதில் அவரது உத்வேகமிக்க வாழ்க்கை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2260134)
SS/SV/RJ/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2260260)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam