ஜவுளித்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தெலங்கானாவின் வாரங்கலில் பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்காவைத் திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAY 2026 5:20PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தெலங்கானாவின் வாரங்கலில் பிரதமர், பிரதமரின் மித்ரா ஜவுளி பூங்காவை இன்று (10.05.2026) திறந்து வைத்தார். இது இந்தியாவின் ஜவுளித் தொழில் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. ₹1695.54 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இது, நாட்டில் முதலில் செயல்பாட்டுக்கு வந்துள்ள பிரதமரின் மித்ரா பூங்காவாகும். இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், வாரங்கலில் உள்ள பிரதமரின் மித்ரா பூங்கா, நமது நாட்டில் ஜவுளிப் புரட்சியை விரைவுபடுத்தி, பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.
முன்மொழியப்பட்ட நாக்பூர்-விஜயவாடா விரைவுச்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, முக்கிய ரயில்வே கட்டமைப்புகள், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு சிறந்த பல்முனை இணைப்பை வழங்கி, உலகளாவிய வர்த்தகத்திற்கான வசதிகளை உறுதி செய்கிறது. ஒரு உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை சூழலமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா, விரிவான கட்டமைப்பு, பிரத்யேக மின் நிலையம், உறுதிசெய்யப்பட்ட நீர் விநியோகம் உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது திரவக் கழிவு வெளியேற்றமற்ற தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் நிலையான வளர்ச்சிக்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது.
₹6,000 கோடிக்கும் அதிகமான முதலீடு இதில் எதிர்பார்க்கப்படுவதாலும், பூங்காவின் 62% ஏற்கனவே ஒதுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும், இந்தப் பூங்கா இந்தியாவின் ஜவுளித் துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக உருவெடுக்கும். 1,327 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, ஜவுளித் துறையில் பெரிய அளவிலான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 24,400-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் கறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259537®=3&lang=1
***
(Release ID: 2259537)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2259596)
வருகையாளர் எண்ணிக்கை : 12