பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2025 அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 3:53PM by PIB Chennai

2025-ம் ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து விருதுகளை, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இருந்து மொத்தம் 42 பஞ்சாயத்துகள் இந்த விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருது வழங்கும் விழா 2026 ஜூன் 3ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது.

இந்த விருதுகள் இரண்டு முக்கிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அதில் தீன் தயாள் உபாத்யாய பஞ்சாயத் சதத் விகாஸ் புரஸ்கார் என்ற விருது, நிலையான வளர்ச்சி இலக்குகளின் 9 முக்கிய கருப்பொருட்களில் சிறப்பாக செயல்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படுகிறது. வறுமை ஒழிப்பு, நல்ல வாழ்வாதாரம், ஆரோக்கியம், குழந்தைகள் நலன், நீர்வளம், தூய்மை மற்றும் பசுமை, அடிப்படை வசதிகள், சமூகநீதி, நல்லாட்சி மற்றும் பெண்கள் நட்பு போன்ற துறைகளில் செயல்திறன் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 34 கிராம பஞ்சாயத்துகள் இந்த விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 நானாஜி தேஷ்முக் சர்வோத்தம் பஞ்சாயத் சதத் விகாஸ் புரஸ்கார்  என்ற விருது, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம பஞ்சாயத்து நிலைகளில் மொத்த செயல்திறனில் சிறந்ததாகத் திகழும் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் 8 பஞ்சாயத்துகள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 மாவட்ட பஞ்சாயத்துகள், 2 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 3 கிராம பஞ்சாயத்துகள் அடங்குகின்றன.

தமிழ்நாட்டில் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கான 3-ம் இடத்துக்கான விருதை கோவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெறும் பஞ்சாயத்துகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை நிதி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

சிறந்த பஞ்சாயத்துகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்  ஆண்டுதோறும் இந்தத் தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்குகிறது. இதன் மூலம் ஊரக இந்தியாவில் மக்கள் பங்கேற்பு மிக்க, உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்த முயற்சி செய்யப்படுகிறது. 2023-ம் ஆண்டு இந்த விருது அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு, நிலையான வளர்ச்சி இலக்குகளின் 9 கருப்பொருட்களுடன் இணைக்கப்பட்டது. இதனால் மதிப்பீட்டு முறை மேலும் வெளிப்படையானதாகவும், தரவின் அடிப்படையிலானதாகவும் மாறியுள்ளது.

 

(Release ID: 2259360)

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259384) வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Odia