தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநராக திரு அசுதோஷ் கோவாரிகர் நியமிக்கப்பட்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAY 2026 1:05PM by PIB Chennai
கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 57-வது ஆண்டின் விழா இயக்குநராக, பிரபல திரைப்பட இயக்குநர் திரு அசுதோஷ் கோவாரிகரை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நியமித்துள்ளது.
திரு கோவாரிகர் இந்தியத் திரையுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஆவார். திரு அசுதோஷ் கோவாரிகருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் பிணைப்பு, திரைப்படக் கலைகளின் பரிணாமம், சர்வதேச திரைப்பட கலாச்சாரம் ஆகியவற்றில் அவருக்குள்ள ஆழமான ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரு கோவாரிகர், “கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநராகப் பணியாற்றுவது எனக்குப் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 1952-ம் ஆண்டு முதல் எண்ணற்ற விழாக் குழுக்களால் பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வந்துள்ள இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது ஒரு மிகப்பெரிய கௌரவமாகும். அதே வேளையில், இது ஒரு பொறுப்புணர்வைத் தருகிறது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா அரசுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2257218®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2257245)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Gujarati