பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு

மேற்கு ஆசியச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த கொள்கை நடவடிக்கைகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் போதுமான ஆதரவை உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது

प्रविष्टि तिथि: 15 APR 2026 6:21PM by PIB Chennai

மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கை, அப்பிராந்தியத்தில் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் உதவி, பல்வேறு துறைகளில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகமும், அத்துறையின் சார்பான புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டன.

கடந்த 2026 பிப்ரவரி, மார்ச் மாதத்துக்கு  இடையே உத்யம் தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்துள்ளது.

92,000 கோடி ரூபாய் மதிப்பில் 5.27 லட்சம் உத்தரவாதங்கள் இத்தகைய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

பெட்ரோலிய அமைச்சகத்தின் சார்பில் விளக்கப்பட்ட போது, பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் ஆகியவற்றில் தட்டுப்பாடு நிலவுவதாக எண்ணி அதை வாங்குவதை தவிர்க்குமாறும் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. எல்பிஜி நுகர்வோர் டிஜிட்டல் முன்பதிவு தளத்தைப் பயன்படுத்துமாறும் விநியோகஸ்தர் அலுவலகங்களுக்கு  நேரடியாக செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு எல்பிஜி, பிஎன்ஜி, சிஎன்ஜி (போக்குவரத்து) சிலிண்டர்களை விநியோகம் செய்வதை அரசு 100 சதவீதம் உறுதி செய்துள்ளது. வர்த்தக எல்பிஜியை பொறுத்தவரை மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சிலிண்டர் பதுக்கலை தடுப்பதற்கான மேற்கொண்ட நடவடிக்கைகளை இதுவரை 2,100-க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று மட்டும் சுமார் 450 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாரசீக வளைகுடா பகுதியில் இந்திய கப்பல்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து இந்திய கப்பல் பயணிகளும் அப்பிராந்தியத்தில் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். டிஜி கப்பல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 157 அழைப்புகளும், 215 மின்னஞ்சல்களும் வந்துள்ளன. இதுவரை 2,337-க்கும் மேற்பட்ட இந்திய கப்பல் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் துறைமுகங்களின் செயல்பாடு வழக்கம் போல் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252308&reg=3&lang=1

 

****

TV/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2252339) आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam