தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலாளராக திரு சஞ்சல் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2026 3:28PM by PIB Chennai

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலாளராக திரு சஞ்சல் குமார், 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அன்று, பொறுப்பெற்றுக் கொண்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1992-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமைப் பணி அதிகாரி ஆவார். திரு சஞ்சல் குமார் பொறுப்பெற்றுக் கொண்ட போது, அப்பொறுப்பிலிருந்து விடைபெறும் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, அமைச்சகம் மற்றும் பல்வேறு ஊடகப் பிரிவுகளின் பிற அதிகாரிகளும் இவரை வரவேற்றனர். திரு சஞ்சய் ஜாஜு-வுக்கு தற்போது, மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திரு சஞ்சல் குமார், மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், மத்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இதன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இவர் அளப்பரிய பங்களித்துள்ளார்.
பீகார் மாநில அரசில், இவர் பல்வேறு மாவட்டங்களில், ஆட்சியராக பணியாற்றியதுடன், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புக்களையும் வகித்துள்ளார்.
திரு சஞ்சல் குமார், ஐ.ஐ.டி கான்பூரிலிருந்து, பி.டெக் மற்றும் எம்.டெக் பட்டங்களையும், பாட்னா பல்கலைக்கழகத்திலிருந்து, பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இதன் மூலம், தனது நிர்வாகப் பணிக்கு, வலுவான கல்வி மற்றும் அனுபவம் சார்ந்த பின்னணியை இவர் கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248313®=3&lang=1
***
AD/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2248438)
வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam