தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள், ரொக்கம் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAR 2026 3:04PM by PIB Chennai

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.408.82 கோடி மதிப்புடைய பொருட்கள், ரொக்கம், மதுபானம், போதைப்பொருள், விலைமதிப்புமிக்க ஆபரணங்கள். இலவசப் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ரொக்கமாக ரூ.17.44 கோடியும், ரூ.37.68 கோடி மதிப்பிலான மதுபானமும். ரூ.167.38 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களும், ரூ.23 கோடி மதிப்பிலான விலைமதிப்புமிக்க ஆபரணங்களும், ரூ.163.30 மதிப்பிலான இலவசப் பொருட்களும் அடங்கும்.

இச்சோதனையின் போது சாதாரண குடிமக்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை தேர்தல் பறக்கும் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக மக்களும் அரசியல் கட்சியினரும், சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். பொதுத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் மார்ச் 15 முதல் மார்ச் 25 வரை 70,944 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 100 நிமிடங்களுக்குள் 67,899 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245635&reg=3&lang=1

-----

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2245729) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Bengali , English , Urdu , हिन्दी , Assamese , Gujarati