பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் இந்தியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 19 JAN 2026 8:23PM by PIB Chennai

ஒப்பந்தங்கள்:

1. தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் குஜராத் மாநில அரசுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலீட்டு அமைச்சகத்திற்கும் இடையே முதலீடு தொடர்பான ஒப்பந்தம்

2. விண்வெளித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி நிறுவனம் இடையேயான ஒப்பந்தம்.

3. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உத்திசார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம்

4. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் - அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவன எரிவாயு நிறுவனம் இடையேயான விற்பனை, கொள்முதல் ஒப்பந்தம்.

5. இந்தியாவின் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடாவுக்கும் (APEDA), ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் இடையே உணவுப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அறிவிப்புகள்:

6. இந்தியாவில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டிங் வழித்தடத்தை அமைப்பதற்கு சி-டிஏசி இந்தியா அமைப்பும் ஐக்கிய அரபு எமிரேட்சின் ஜி-42 நிறுவனமும் இணைந்து செயல்படும் என்று கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

7. 2032-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 200 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

8. இருதரப்பு சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டதுடன் அணுசக்தி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

9. குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரில் முதல் அபுதாபி வங்கி, டிபி வேர்ல்ட் ஆகிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனங்களின் அலுவலகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

10. டிஜிட்டல் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் தூதரகங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் ஆராய ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

11. அபுதாபியில் இந்திய கலை, பாரம்பரியம், தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்டவை அடங்கிய கலாச்சார மையத்தை நிறுவுவதற்கான ஒரு முதன்மைத் திட்டத்தில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இணைந்து செயல்படும் என்று கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

12. எதிர்கால சந்ததியினரிடையே ஆழமான புரிதல், கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, கலாச்சார பிணைப்புகளை வளர்ப்பதற்காக இரு நாடுகளிலிருந்தும் இளைஞர் பிரதிநிதிகள் குழுவின் பயணங்களை அதிகரிப்பது என்று கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

***

(Release ID: 2216278)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2242043) வருகையாளர் எண்ணிக்கை : 39