பிரதமர் அலுவலகம்
அசாமின் குவஹாத்தியில் நடைபெற்ற பகுரும்வோ த்வோ நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JAN 2026 11:50PM by PIB Chennai
குவஹாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் போடோ சமூகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வான பகுரும்பா த்வோ 2026-ல் பங்கேற்ற பிரதமர் அதன் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"பகுரும்பா த்வோ நிகழ்ச்சியில் குவஹாத்தியின் எனது சகோதர, சகோதரிகளுடன் பங்கேற்றது சிறந்த அனுபவம். இந்த நிகழ்ச்சி புகழ்பெற்ற போடோ கலாச்சாரத்தை வெளிப்படுத்தியது. இந்த வரலாற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்."
"போடோ கலாச்சார, மரபுகளைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன்!"
"எங்களைப் பொறுத்தவரை, அசாமின் கலாச்சாரம் முழு தேசத்திற்கும் பெருமை. மாநிலத்தின் வளமான பாரம்பரியத்தையும் அதன் சிறந்த ஆளுமைகளையும் கௌரவிப்பது ஒரு பாக்கியம்."
"பல்வேறு துறைகளில் அசாமில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முழு நாடும் பெரிதும் பாராட்டுகிறது."
“தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அசாமின் தூரத்தை உணர்வு ரீதியாகக் குறைத்தது மட்டுமல்லாமல், மேம்பட்ட உள்கட்டமைப்பு மூலம் அசாமின் முழுப் பகுதியையும் வளர்ச்சியின் பிரதான நீரோட்டத்துடன் இணைத்துள்ளது."
***
(Release ID: 2215750)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2242007)
வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam