பிரதமர் அலுவலகம்
2025-26-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2% ஆக உயர்ந்திருப்பதற்குப் பிரதமர் மகிழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2025 6:24PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் வெளியான மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“2025-26-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% வளர்ச்சி ஏற்பட்டு இருப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. வளர்ச்சிக்கு ஆதரவான அரசின் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் தாக்கத்தை இது பிரதிபலிக்கிறது. இது நமது மக்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. இந்த தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நபரின் வாழ்க்கை முறையையும் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படுகிறது."
---
(Release ID: 2195992)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2241219)
வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Malayalam
,
Bengali
,
Bengali-TR
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada