பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததன் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 8:51PM by PIB Chennai

கேரளத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, துடிப்பான கடற்கரை நகரமான கொச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான முன்முயற்சிகளைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கொச்சிக்கு வருவது எப்போதும் ஒரு அற்புதமான அனுபவமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். "இந்தத் திட்டங்களுக்காக கேரள மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகள் மூலம் விழாவின் முக்கிய அம்சங்கள் பற்றி பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 

"இன்று, கடற்பாசி உற்பத்தியில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. எங்கள் அரசும் அதையே ஊக்குவிக்கிறது.

 

அதேபோல், நவீன மீன் வளர்ப்பு முறைகளையும் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்."

 

"மீனவர்களின் நலனுக்காக ஒரு தனி அமைச்சகத்தை எங்கள் அரசுதான் உருவாக்கியது. இது கேரளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளித்தது. இந்தத் துறையிலும் விவசாயிகள் உற்பத்ததி  அமைப்புகள் வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது."

 

"சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதில் அகில கேரள தீவர சபா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது."

 

"கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பாலிப்ரொப்பிலீன் அலகு, நமது தன்னிறைவு முயற்சிகளை வலுப்படுத்தும் மற்றும் பேக்கேஜிங், ஜவுளி, வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற பல துறைகளை ஆதரிக்கும்."

 

"கேரளத்தில் இணைப்புக்கு ஒரு ஊக்கம்!"

 

(Release ID: 2238598)

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240995) வருகையாளர் எண்ணிக்கை : 36