பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2025 10:42PM by PIB Chennai

கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு 2025-ன் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"வழக்கம்போல, கோயம்புத்தூரில் எனக்குக் கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே சிறப்பானது. இந்த துடிப்பான நகர மக்களின் அரவணைப்பு, பாசம், ஆசீர்வாதம் ஆகியவை எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கிறது."

"கடந்த 11 ஆண்டுகளில், இந்திய விவசாயத் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, நமது இளைஞர்கள் இப்போது இந்தத் துறையிலும் ஏராளமான வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இந்த மாற்றத்தில் இயற்கை விவசாயம் முக்கிய பங்கு வகித்துள்ளது."

"ஒரே வருடத்திற்குள், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது."

"தமிழ்நாட்டிலும், தென்னிந்தியா முழுவதிலும், நமது விவசாயிகள் தொடர்ந்து இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களின் முயற்சிகள் முழு நாட்டிற்கும் ஒரு உத்வேகமாக உள்ளன."

 

"இயற்கை விவசாயம் உண்மையிலேயே அறிவியல் ஆதரவு இயக்கமாக பரிணமிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்."

"கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு 2025 மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது சிறந்த நடைமுறைகளைப் பற்றிய கூடுதல் விவாதத்தையும் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது. இந்தத் துறையில் விவசாயிகள் செய்யும் புதுமையான பணிகளைக் காண்பதும் மகிழ்ச்சியாக இருந்தது."

----

(Release ID: 2191907)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240931) வருகையாளர் எண்ணிக்கை : 22