பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் நடைபெற்ற பழங்குடியினர் பெருமை தின நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2025 10:23PM by PIB Chennai

குஜராத்தின் தெடியாபாடாவில், பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவைக் குறிக்கும் வகையில், பழங்குடியினர் பெருமை தின நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"குஜராத்தின் தெடியாபாடாவில் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன்."

"பழங்குடியின பெருமை தினத்தின் புனிதமான சந்தர்ப்பத்தில், நாடு முழுவதிலுமிருந்து பழங்குடி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன."

"தெடியாபாடாவில் பழங்குடியின சமூக குழந்தைகளின் கல்விக்காக பகவான் பிர்சா முண்டா பழங்குடி போக்குவரத்து பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பாக்கியம் கிடைத்தது."

"ராமருடன் தொடர்புடைய பழங்குடியின சமூகம் காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்டது. கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, போக்குவரத்து இணைப்பு போன்ற வசதிகளுடன் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது."

"எங்கள் பழங்குடியின சகோதர சகோதரிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம். அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன."

----

(Release ID: 2190428)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240927) வருகையாளர் எண்ணிக்கை : 19