பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டின் தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2025 10:22PM by PIB Chennai

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற "சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல்" குறித்த தேசிய மாநாட்டைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். சட்ட உதவி வழங்கும் நடைமுறையை வலுப்படுத்துவது, இந்தியாவின் நீதித்துறை அமைப்புக்கு புதிய பலத்தை அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“30 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திற்கு வாழ்த்துகள். உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் தேசிய மாநாடு, நமது நீதி அமைப்பை அனைவரும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்."

“கடந்த சில ஆண்டுகளில், 'நீதித் துறையின் எளிமையை' மேம்படுத்த எங்கள் அரசு பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு முயற்சிகள் ஏழைகள், ஒதுடுக்கப்பட்டவர்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு விரைவான முறையில், குறைந்த செலவில் நீதி கிடைப்பதை உறுதி செய்துள்ளன."

"இந்தியாவின் மரபுகளில் மத்தியஸ்தம் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. புதிய மத்தியஸ்தச் சட்டம் நவீனமயமாக்கல், மத்தியஸ்தம் தொடர்பான பிற அம்சங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது."

"80,000-க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இந்த குறிப்பிடத்தக்க முயற்சியை உயர் நீதிமன்றங்களும் மாவட்ட நீதிமன்றங்களும் முன்னெடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்."

-----

(Release ID: 2187945)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240915) வருகையாளர் எண்ணிக்கை : 17