பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் பயணத்தின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2025 10:44PM by PIB Chennai

பழங்குடியினரின் பெருமை, வளர்ச்சிப் பயணம், மக்கள் நலன் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் சத்தீஸ்கர் பயணத்தின் சில அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது;

"சத்தீஸ்கர் பழங்குடி சமூகங்களின் அசாத்திய துணிச்சல், தியாகம், தேசபக்தி ஆகியவற்றைப் போற்றும் வகையில் நவ ராய்ப்பூர் அடல் நகரில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்தை நான் திறந்து வைத்தேன். அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டதோடு, தியாகி வீர் நாராயண் சிங் நினைவிடத்தையும் அவரது சிலையையும் திறந்து வைக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது."

"நவ ராய்ப்பூர் அடல் நகரில் நடைபெறும் வெள்ளி விழா கண்காட்சியில் சத்தீஸ்கரின் 25 ஆண்டு கால வளர்ச்சிப் பயணத்தைக் காண்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."

"25 ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டதன் மூலம் மதிப்பிற்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் விதைத்த விதைகள் இப்போது வளர்ச்சியின் ஆலமரமாக வளர்ந்துள்ளன. இங்குள்ள எனது சகோதர, சகோதரிகள் எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளனர். அவை என்னை பெருமைப்படுத்துகின்றன!"

----

(Release ID: 2185386)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240906) வருகையாளர் எண்ணிக்கை : 19