பிரதமர் அலுவலகம்
பிரதமரின் எத்தியோப்பியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
16 DEC 2025 10:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் எத்தியோப்பிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்:
* உத்திசார் ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முடிவு
* சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு, பரஸ்பர நிர்வாக உதவி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது
* எத்தியோப்பியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் தரவு மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
* ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்கான ஏற்பாட்டை செயல்படுத்துதல்
* ஜி20 பொது கட்டமைப்பின் கீழ் எத்தியோப்பியா தொடர்பான கடன் மறுசீரமைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
* இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் எத்தியோப்பிய அறிஞர்களுக்கு உதவித்தொகையை இரட்டிப்பாக்க முடிவு
* இந்திய தொழில் நுட்ப பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவுத் துறையில் எத்தியோப்பிய மாணவர்களுக்கும் நிபுணர்களுக்கும் சிறப்பு குறுகிய கால படிப்புகளை வழங்க முடிவு
* அடிஸ் அபாபாவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையின் கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு, பிறந்த குழந்தை பராமரிப்பு ஆகிய துறைகளில் திறனை அதிகரிக்க இந்தியா உதவ முடிவு செய்யப்பட்டது.
***
(Release ID: 2204943)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2240778)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam