நிதி அமைச்சகம்
தில்லி மற்றும் கொல்கத்தாவில் சட்ட விரோத தங்கக் கடத்தல் மோசடி முறியடிப்பு: ₹14.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரொக்கம் பறிமுதல், ஆறு பேர் கைது
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAR 2026 10:59AM by PIB Chennai
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ - DRI), வெளிநாட்டு தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி உள்நாட்டு சந்தையில் ரகசியமாக விற்பனையில் ஈடுபட்ட ஒரு கும்பலை கண்டுபிடித்துள்ளது. இந்த நடவடிக்கையின் விளைவாக ₹14.13 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தத்தில், ₹13.41 கோடி மதிப்புள்ள 8286.81 கிராம் தங்கம், ₹19.67 லட்சம் மதிப்புள்ள 7350.4 கிராம் வெள்ளி, ₹51,74,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டன. உளவுத்துறை தகவல் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள், கொல்கத்தாவிலிருந்து ரயிலில் வந்த ஒரு பயணியை, புதுதில்லி ரயில் நிலையத்தில் சோதனை செய்ததில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது .
தொடர்ந்து கொல்கத்தாவில் இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உட்பட மொத்தம் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240297®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2240338)
வருகையாளர் எண்ணிக்கை : 12