பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 13 MAR 2026 12:54PM by PIB Chennai

சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – சிலி இடையே இனிய நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை தாம் எதிர்நோக்கி இருப்பதாக திரு மோடி கூறியுள்ளார். “வெற்றிகரமான பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள்!” என்று திரு மோடி கூறியுள்ளார்.

 சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 “சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்கு இனிய வாழ்த்துகள். இந்தியா – சிலி இடையே இனிய நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். வெற்றிகரமான பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள்!

@joseantoniokast

***

(Release ID: 2239457)

AD/SMB/RJ/RK


(रिलीज़ आईडी: 2239671) आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam