தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐதராபாத்தில் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் 'ஐலைன் ஸ்டுடியோஸ்' தொடக்கம்: இந்தியாவின் புத்தொழில் சூழல் மேம்படும் என எதிர்பார்ப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 5:41PM by PIB Chennai

நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தனது சர்வதேசத் தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஸ்டுடியோவான 'ஐலைன் ஸ்டுடியோஸ்' (Eyeline Studios) கிளையை ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்  துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

சுமார் 32,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த அதிநவீன மையத்தைத் தெலங்கானா முதலமைச்சர் திரு. அனுமுல ரேவந்த் ரெட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு. சஞ்சய் ஜாஜு, ஐலைன் ஸ்டுடியோஸ் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஜெஃப் ஷாபிரோ மற்றும் நடிகர் திரு. ராணா டகுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஐதராபாத் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் சங்கமமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.  திரு. சஞ்சய் ஜாஜு பேசுகையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்ட 'ஆரஞ்சு பொருளாதார'  வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நாடு முழுவதும் 15,000 உள்ளடக்க உருவாக்குநர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

 

இந்த மையம் சர்வதேசத் தரத்திலான கதையாடல்களுக்கும், தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239059&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண்: 2239059

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239299) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Kannada , Malayalam