பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், அவசரகால எண்ணெய் இருப்புக்களை வெளியிடும் சர்வதேச எரிசக்தி முகமையின் முடிவை இந்திய அரசு வரவேற்றுள்ளது
प्रविष्टि तिथि:
11 MAR 2026 8:46PM by PIB Chennai
எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், அவசரகால எண்ணெய் இருப்புக்களை வெளியிட சர்வதேச எரிசக்தி முகமை முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பிலும், சர்வதேச எரிசக்தி ஒத்துழைப்பு அமைப்பிலும் தீவிர பங்கேற்பாளராக செயல்படும் இந்தியா, இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.
மத்திய கிழக்கில், சர்வதேச எரிசக்தி சந்தைகளில் நிலவி வரும் சூழலை இந்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
சர்வதேச எரிசக்தி முகமையின் முயற்சிகளுக்கு இணங்க, உலகளாவிய சந்தை நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
(Release ID: 2238587)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2238652)
आगंतुक पटल : 110