குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 2:31PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெறும் நீர் திருவிழா 2026 நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நீர் என்பது வெறும் அடிப்படை வசதியாக மட்டுமின்றி நமது கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்வாதாரம் மற்றும் சமூக வாழ்வுடன் தொடர்புடையது என்று கூறினார். பல ஆண்டுகளாக கிராமத்தினர் குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் பெரும் தொலைவில் இருந்து குடிநீரை எடுத்துவர வேண்டியிருந்ததாக தெரிவித்தார். தூய்மையான நீரை வழங்குவது வெறும் வசதிக்குரிய அம்சமாக மட்டுமின்றி, இது காலம், சுகாதாரம் மற்றும் கண்ணியம் குறித்த அம்சம் என்று அவர் கூறினார். இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஜல் ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

குடிநீரை பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட கிராமத்தினர் தற்போது தங்கள் வீடுகளில் தூய்மையான, பாதுகாப்பான நீரை பெறுவதாக கூறினார். நீர் ஆதாரத்தை பெறுவது வெறும் அரசின் பொறுப்பாக மட்டுமின்றி இது முழு சமூகத்தை சார்ந்தது என்று குறிப்பிட்டார். நீர் ஆய்வு செயல்பாடு மற்றும் இதர பாராமரிப்பு பணிகளில் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபட்டுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். சுயஉதவிக் குழுக்களின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு, மகளிர் மற்றும் சமூகத்தின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதற்கு பல உதாரணங்கள் இருப்பதாக கூறினார்.

நமது எதிர்காலத்தை பாதுகாக்க நாம் அவசியம் நீரை பாதுகாக்க வேண்டும் என்றும், இது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்றும் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238102&reg=3&lang=1

***

TV/IR/RK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2238288) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Odia , Kannada , Malayalam