உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 10 MAR 2026 3:27PM by PIB Chennai

பாரதிய நியாய சன்ஹிதா - 2023 சட்டத்தில், முதன்முறையாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான விதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு தனிப் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்க வகை செய்ப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்க்கையின் இறுதி வரை அல்லது மரணம் வரை ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

 

நீதித்துறை செயல்முறையின் வேகம், செயல்திறன், வெளிப்படைத்தன்மையை கணிசமாக மேம்படுத்த, புதிய குற்றவியல் சட்டங்களில், சம்மன், வாரண்ட் வழங்குதல், சேவை செய்தல், செயல்படுத்துதல், விசாரித்தல், சாட்சியங்களைப் பதிவு செய்தல், மேல்முறையீட்டு நடவடிக்கைகள் அல்லது வேறு எந்த நடவடிக்கையும் மின்னணு முறையில் நடத்தப்படலாம் என்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237478&reg=3&lang=1

(Release ID: 2237478)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2237857) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Telugu