சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியாவில் சிவிங்கிப் புலிகளின்எண்ணிக்கை 53 ஆக உயர்வு; குனோ தேசியப் பூங்காவில் ஐந்து குட்டிகளை ஈன்ற ஜ்வாலா
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2026 2:12PM by PIB Chennai
குனோ தேசியப் பூங்காவில், நமீபியாவைச் சேர்ந்த ஜ்வாலா என்னும் சிவிங்கிப் புலி, ஐந்து குட்டிகளை ஈன்றதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் திங்களன்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்தியாவில் பிறந்து வளர்ந்து வரும் சிவிங்கி புலி குட்டிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். இது இந்திய மண்ணில் 10- வது வெற்றிகரமான சிவிங்கிப் புலி பிரசவமாகும். இது இந்தியாவின் சிவிங்கிப்புலி பாதுகாப்பு பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும்.
சிவிங்கிப்புலி திட்டத்திற்கு இது பெருமிதம் அளிக்கும் தருணம் என்று கூறியுள்ள திரு யாதவ், கால்நடை மருத்துவர்கள், கள ஊழியர்கள் மற்றும் களத்தில் தொடர்ந்து அயராது உழைக்கும் அனைவரின் அர்ப்பணிப்பு முயற்சிகள், திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்தக் குட்டிகளின் பிறப்புடன், இந்தியாவில் மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்புக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் இதயத்தைத் தூண்டும் தருணம் இது என்று விவரித்துள்ள அமைச்சர், ஜ்வாலாவும் அதன் குட்டிகளும் வலுவாக வளர்ந்து, இந்தியாவின் சிவிங்கிப் புலி எண்ணிக்கையை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
.
சமீபத்தில், தென்னாப்பிரிக்காவின் காமினி என்ற சிவிங்கிப்புலி , நான்கு குட்டிகளை ஈன்று, இரண்டாவது முறையாகத் தாயாகியது. மேலும், பிப்ரவரி 28, அன்று, திரு யாதவ், போட்ஸ்வானாவிலிருந்து பெறப்பட்ட ஒன்பது சிவிங்கிப் புலிகளை -6 பெண்கள் மற்றும் 3 ஆண்களை-மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் விடுவித்தார். பெரிய நிலப்பரப்பில் படிப்படியாக வெளியே விடப்படுவதற்கு முன்பு, விலங்குகள் ஒரு வழக்கமான சுகாதார கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.
(Release ID: 2236900)
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237257)
வருகையாளர் எண்ணிக்கை : 8