ஊரக வளர்ச்சி அமைச்சகம்
விபி ஜி ராம் ஜி சட்டம் 2025-க்கு சின்னம் வடிவமைத்தல் போட்டியை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2026 5:19PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி சட்டத்திற்காக மைகவ் இணையதளத்தில் சின்னம் வடிவமைப்பு போட்டிக்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. விபி ஜி ராம் ஜி சட்டம் 2025-ன் கீழ், உள்ளடக்கிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஊரக மேம்பாடு ஆகியவற்றைத் திறம்படப் பிரதிபலிக்கும் வகையில் சின்னத்தை தேர்ந்தெடுப்பதற்காக இப்போட்டி நடத்தப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் சின்னம் அதிகாரப்பூர்வ சின்னமாக மேம்பாட்டு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சின்னத்தை வடிவமைத்த வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்பதற்கான கடைசி நாள் 2026 மார்ச் 20 ஆகும். போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆர்வமுடையவர்கள் மைகவ் இணையதளத்தில் (https://bit.ly/3Pp6vi8) பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஒரு பங்கேற்பாளர் ஒரு பதிவை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237055®=3&lang=1
***
AD/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237140)
வருகையாளர் எண்ணிக்கை : 11