உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய விமான நிறுவனங்கள் மேற்காசிய பிராந்தியத்தில் இருந்து இன்று 50 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2026 12:08AM by PIB Chennai
இந்தியா - மேற்காசியா பிராந்தியம் இடையே விமானப் போக்குவரத்தை பாதிக்கும் வகையில், மேற்காசியாவில் நிலவும் சூழல் குறித்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு, விமானங்களை முறையாக இயக்குதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக விமான நிறுவனங்கள் தேவையான நடவடிக்கை மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
2026 மார்ச் 7 அன்று பயணிகளுக்கான சேவைகள் குறித்து வெளியிடப்பட்ட தரவின்படி, மேற்காசிய பிராந்தியத்தில் இருந்து 51 விமானங்கள் மூலம் 8,175 பயணிகள் இந்தியா வந்ததடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
2026 மார்ச் 8 அன்று இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாஷா ஆகியவை துபாய், அபுதாபி, ரஸ் அல் கைமா, ஃபுஜெய்ரா, மஸ்கட், ஜெட்டா போன்ற பிராந்தியங்களின் விமான நிலையங்களில் இருந்து 49 விமானங்களை இந்தியாவிற்கு இயக்கின.
தற்போதைய நிலவரப்படி, 2026 மார்ச் 9 அன்று 50 விமானங்களை இயக்க இந்திய விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
மேலும் இந்திய விமான நிறுவனங்கள் பிராந்தியத்தின் மற்ற விமான நிலையங்களில் நிலவும் சூழல் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்கிறது. அதன்மூலம் அப்பகுதிகளில் இருந்து மேலும் விமானங்களை இயக்க முடியும். விமான நிறுவனங்கள் மற்றும் தொடர்புடையவர்களுடன் அமைச்சகம் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகிறது. கட்டணங்கள் நியாயமானதாக இருப்பதையும் இக்காலகட்டத்தில் கட்டண உயர்வு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
பயணிகள் விமானங்களின் இயக்கம் தொடர்பாக புதிய தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைச்சகம் தொடர்ந்து சூழலை உன்னிப்பாக கண்காணித்து தேவைப்பட்டால், புதிய தகவல்களை வெளியிடும்.
***
Release ID : 2236757
AD/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2236942)
வருகையாளர் எண்ணிக்கை : 13