பிரதமர் அலுவலகம்
"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் நாளை பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2026 4:35PM by PIB Chennai
"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் நாளை (மார்ச் 9, 2026) நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காலை 10:15 மணிக்கு காணொளி மூலம் உரையாற்றுகிறார்.
இந்தக் கருப்பொருளின் கீழ், கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம், ஆயுஷ் மருத்துவம், சுற்றுலா, விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் பல சிறப்பு அமர்வுகள் நடைபெறும். கல்வியிலிருந்து வேலைவாய்ப்புக்கான பாதைகளை வலுப்படுத்துதல், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) உள்ளடக்க உருவாக்க ஆய்வகங்களை உருவாக்குதல், சுகாதார நிபுணர்கள் - பராமரிப்பாளர்களுக்கான பயிற்சியை விரிவுபடுத்துதல், பிராந்திய மருத்துவ மையங்கள், புதிய ஆயுஷ் நிறுவனங்களை உருவாக்குதல், விருந்தோம்பலில் திறன் மேம்பாடு, நிலையான சுற்றுலா வழித்தடங்கள், வடகிழக்கு பிராந்தியத்தில் புத்த மத சுற்றுலா வழித்தடம், பாரம்பரிய சுற்றுலா மேம்பாடு போன்ற பல அம்சங்கள் இந்த கருத்தரங்க விவாத அமர்வுகளில் இடம்பெறும்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கு, பட்ஜெட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள கொள்கைத் தொலைநோக்கை செயல்படுத்தக்கூடிய உத்திகளாக மாற்ற, அரசு, தொழில்துறையினர், துறை சார்ந்த வல்லுநர்கள் ஆகியோரிடையே கூட்டு ஈடுபாட்டிற்கு ஒரு தளத்தை வழங்கும். இந்த விவாதங்கள், பட்ஜெட் அறிவிப்புகளைத் திறம்பட செயல்படுத்துவதை எளிதாக்கும். அத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2236592)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2236628)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam