தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீட்டின் விளைவாக, கடந்த பல மாதங்களாக தாய்லாந்தில் சித்திரவதைக்கு ஆளான ஆறு இந்திய தொழிலாளர்கள் மீட்பு

प्रविष्टि तिथि: 07 MAR 2026 11:29AM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என். எச். ஆர். சி)  தன்னிச்சையான தலையீட்டின் விளைவாக, கடந்த ஆறு மாதங்களாக தாய்லாந்தில் தங்கள் முதலாளியால் சித்திரவதைக்கு ஆளான ஆறு இந்திய தொழிலாளர்களை மீட்பதில் வெளியுறவு அமைச்சகம் விரைவாக செயல்பட்டு வருகிறது. அவர்களில் நான்கு பேர் பிப்ரவரி 20 அன்று வெளியுறவு அமைச்சகத்துக்கு, மனித உரிமைகள் ஆணையம் தகவல் அனுப்பிய மறுநாளே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் பாங்காக்கிலிருந்து தங்கள் முதலாளியால் முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தில் கொல்கத்தாவை அடைந்தனர்.

மீட்டெடுக்கப்பட்ட மீதமுள்ள இரண்டு தொழிலாளர்கள் தங்கள் விசாவை மீறி தங்கியிருந்ததால் தாய்லாந்து  அதிகாரிகளுடன் திருப்பி அனுப்பும் விஷயத்தைத் தொடர்வதாக வெளியுறவு அமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது.

பிப்ரவரி 20 அன்று, ஒரு ஊடகச் செய்தியை அறிந்த பிறகு, சிறைபிடிக்கப்பட்ட ஆறு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஏதேனும் உதவி வழங்க முடியுமா என்று ஆணையம் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்களைக் கோரியது நினைவுகூரத்தக்கது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல்தொடர்புகளைப் பெற்ற உடனேயே, வெளியுறவு அமைச்சகத்தின் தெற்கு பிரிவு தாய்லாந்து அதிகாரிகளிடம் அவர்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தது, மேலும் ஆறு தொழிலாளர்கள் பணிபுரிந்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளரையும் தொடர்பு கொண்டது.

ஒடிஷாவின் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் அவலநிலையை பதிவு செய்த ஒரு வீடியோவைப் பற்றி 2026 பிப்ரவரி 17 அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவர்கள் பாங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் தங்கள் முதலாளியால் சிறைபிடிக்கப்பட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதைக்கு  உட்படுத்தப்பட்டனர். அவர்கள் எந்தச் சம்பளமும் சரியான உணவும் இல்லாமல் ஒரு தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களின் முதலாளி அவர்களின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236263&reg=3&lang=1

***

TV/PKV/RK


(रिलीज़ आईडी: 2236333) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Odia , Telugu