பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடிமைப் பணிகள் தேர்வு 2025-இல் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2026 8:27PM by PIB Chennai

குடிமைப் பணிகள் தேர்வு 2025-இல் வெற்றி பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைய உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெறுவது, பொது சேவையின் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.  நாட்டுக்கு சேவையாற்றவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் தயாராக உள்ள வெற்றியாளர்களுக்கு அவர் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

தேர்வில் விரும்பிய முடிவைப் பெறாதவர்களுக்கும் பிரதமர் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுபோன்ற தருணங்கள் கடினமாக இருந்தாலும்  ஒரு பெரிய பயணத்தில் இது ஒரு முயற்சி மட்டுமே என்பதை வலியுறுத்தினார்.

 

எதிர்காலத் தேர்வுகள், பல்வேறு துறைகள் என்ற அளவில் தனிநபர்கள் நாட்டிற்குப் பங்களிக்கக்கூடிய பல வழிகளிலும், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை எடுத்துரைத்த பிரதமர், எதிர்கால முயற்சிகளுக்காக அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

 

“குடிமைப் பணிகள் தேர்வு 2025-இல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அவர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைய வழிவகுத்துள்ளன.

 

நாட்டிற்கு சேவையாற்றவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.”

 

"குடிமைப் பணிகள் தேர்வில் விரும்பிய முடிவைப் பெற முடியாதவர்களுக்கு, இதுபோன்ற தருணங்கள் கடினமாக இருக்கக்கூடும் என்பதை நான் அறிவேன். இருப்பினும், ஒரு பெரிய பயணத்தில் இது ஒரு முயற்சி மட்டுமே. எதிர்காலத் தேர்வுகள், பல்வேறு துறைகள் என்ற அளவில் நீங்கள் நாட்டிற்குப் பங்களிக்கக்கூடிய பல வழிகளிலும், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.”

 

(Release ID: 2236152)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2236199) வருகையாளர் எண்ணிக்கை : 26