தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்- மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்: கல்வி, திறன்கள் மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்புகள்" என்ற தலைப்பில், மார்ச் 9 ஆம் தேதி பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2026 6:47PM by PIB Chennai
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், உயர்கல்வித் துறையுடன் இணைந்து, "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்- மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்: கல்வி, திறன்கள் மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்புகள்" என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளது. 2026–27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய முன்முயற்சிகள் குறித்து விவாதிக்க இந்த இணையவழிக் கருத்தரங்கு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்து இந்தியாவின் கல்வி, திறன்கள் மற்றும் படைப்பு பொருளாதார சூழலியலை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கும்.
மார்ச் 9 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு நடைபெறும் துவக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (ஏவிஜிசி) - படைப்பு பொருளாதாரத்திற்கான பட்ஜெட் முன்முயற்சியின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வையைக் கோடிட்டுக் காட்டும் சிறப்பு உரையை நிகழ்த்துவார்.
இந்த இணையவழிக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் "பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏவிஜிசி உள்ளடக்க ஆய்வகங்கள்" என்ற தலைப்பில் பிரேக்அவுட் அமர்வை நடத்தும். இந்த அமர்வு, படைப்பாற்றல் திறமைகளை வளர்ப்பது, இந்தியாவின் ஏவிஜிசி சூழலியலை வலுப்படுத்தவது மற்றும் நாட்டின் வேகமாக விரிவடையும் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்குத் திறமையான படைப்பாளர்களின் வலுவான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட 15000 பள்ளிகள் மற்றும் 500 உயர் கல்வி நிறுவனங்களில் ஏவிஜிசி உள்ளடக்க ஆய்வகங்களை நிறுவுவதற்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236076®=3&lang=1
(Release ID: 2236076)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2236163)
வருகையாளர் எண்ணிக்கை : 29