ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மை பாரத் உடன் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு மற்றும் ஊரக வாழ்வாதார உறுதிச் சட்டம் குறித்த நாடு தழுவிய டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 7:56PM by PIB Chennai
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மை பாரத் உடன் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் குறித்த நாடு தழுவிய டிஜிட்டல் பிரச்சாரத்தை நாளை முதல் தொடங்குகிறது.
இத்திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும். இதற்கு வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஜி ராம் ஜி இளையோர் சக்தி, பஞ்சாயத்துகளின் முன்னேற்றம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சி நாட்டிலுள்ள இளைஞர்களை மையமாகக் கொண்டு விநாடி-வினா வீடியோ பதிவு தொடர்பான போட்டிகள், படைப்பாற்றல் போட்டிகள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இளைஞர்களின் பங்களிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கையாகும். இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எனது கிராமத்திற்கான 60 விநாடிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான குறும்படம் ரீல்ஸ் அல்லது அனிமேஷன் வீடியோ போட்டிகள் மார்ச் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்படுகிறது.
இந்த முயற்சி ஊரக மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வாழ்வாதாரத்தில் இளைஞர்கள் பங்களிப்பதற்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்பை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235721®=3&lang=2
***
TV/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2236150)
வருகையாளர் எண்ணிக்கை : 69