வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – ஜப்பான் இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த 7-வது கூட்டுக்குழுக் கூட்டம் டோக்கியோவில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 04 MAR 2026 5:53PM by PIB Chennai

இந்தியா – ஜப்பான் இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த 7-வது கூட்டுக்குழுக் கூட்டம் 2026 மார்ச் 2 அன்று ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது.

மத்திய வர்த்தகத்துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் இணைத் தலைமையேற்ற இந்தக் கூட்டத்தில் ஜப்பான் வெளியுறவுத்துறையின் மூத்த துணை அமைச்சர் கலந்து கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் தொடர்பான விஷயங்கள் குறித்தும், இருதரப்பு பொருளாதார ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும், இருதரப்பிலும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு இடையே ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சரை திரு அகர்வால் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு, வணிகச் சூழலை மேம்படுத்துதல், வரவிருக்கும் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான 14-வது மாநாடு ஆகியவை உள்ளிட்ட பரவலான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வட்டமேசை கலந்துரையாடலின்போது, ஜப்பானின் முன்னணி தொழில்துறை பிரதிநிதிகளுடன் திரு ராஜேஷ் அகர்வால் பேச்சு நடத்தினார். அன்று பிற்பகலில் ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியத் தொழில்கள் கூட்டமைப்புடன் இணைந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவிலிருந்து வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதில் கவனம் செலுத்திய இந்தக் கண்காட்சி ஜப்பான் நிறுவனங்களிலிடமிருந்து அதிக அளவில் முதலீடுகள் வருவதற்கு வழிவகுத்தது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235329&reg=3&lang=1

****

TV/SMB/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235357) வருகையாளர் எண்ணிக்கை : 86
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Malayalam