பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – இஸ்ரேல் இடையே வலுவான ஒத்துழைப்பு உள்ளது பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2026 11:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா – இஸ்ரேல் இடையே வலுவான மற்றும் நீடித்த நட்புறவு குறித்து எடுத்துரைத்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையே நம்பிக்கை, புதுமை கண்டுபிடிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புணர்வை அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு வலுவடைந்து வருவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்ததுடன், இரு நாடுகளும் வலிமை மற்றும் பன்முகத்தன்மையை கொண்டுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

நம்பிக்கை, புதுமை கண்டுபிடிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு மீது இந்தியா நன்மதிப்பு வைத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். தமது இஸ்ரேல் பயணத்தின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான விவாதங்களை நடத்துவதை தாம் எதிர்நோக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூயிருப்பதாவது;

“எனது நண்பர் பிரதமர் நெதன்யாகுவிற்கு நன்றி.

இந்தியா – இஸ்ரேல் இடையேயான பிணைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் பன்முகத்தன்மை குறித்த தங்களது கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். நம்பிக்கை, புதுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பரஸ்பரம் இருநாடுகளில் அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆழமான நட்புறவின் மீது இந்தியா மதிப்பு வைத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து அந்நாட்டு பிரதமருடன் விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231599&reg=3&lang=2

***

TV/SV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235317) வருகையாளர் எண்ணிக்கை : 23