பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

உத்தரப்பிரதேசத்தில் ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமி கண்டக்டர் ஆலை அடிக்கல் நாட்டு விழாவின்போது ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 21 FEB 2026 8:55PM by PIB Chennai

உத்தரபிரதேசத்தில் ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமி கண்டக்டர் ஆலைக்கான அடிக்கல்நாட்டு விழாவின்போது தாம் ஆற்றிய உரையின் சில முக்கியப் பகுதிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் செமி கண்டக்டர் சூழல் அமைப்பிற்கு உத்தரப் பிரதேசம் ஒரு முக்கிய மையமாக மாற உள்ளது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஹெச்சிஎல் - ஃபாக்ஸ்கானின் புதிய தொழிற்சாலை, தொழில்நுட்ப சக்தியின் மையமாக உத்தரப் பிரதேசத்தின் புதிய அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும்."

"இந்த பத்து ஆண்டுகள் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான காலகட்டம். பசுமை எரிசக்தி முதல் செயற்கை நுண்ணறிவு வரை, இந்த பத்து ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் இந்தியா செய்து வரும் விஷயங்கள் 21-ம் நூற்றாண்டில் நமது வலிமைக்கு அடித்தளமாக அமையும்."

"கடந்த 11 ஆண்டுகளில், நினைத்தது அடையப்படுகிறது என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. மின்னணு உற்பத்தி ஒரு எடுத்துக்காட்டு, இது ஒன்று மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள் உள்ளன."

***

(Release ID: 2231381)

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2235314) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam