குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஹோலிப் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAR 2026 5:29PM by PIB Chennai

ஹோலிப் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹோலி என்பது சமூக நல்லிணக்க செய்தியை தெரிவிக்கும் மகிழ்ச்சிகரமான கொண்டாட்ட விழாவாகும். இந்த விழா சமூகத்தில் அன்பையும், நம்பிக்கையும் பரவச் செய்து, சமூக ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளமாகவும் ஹோலி திகழ்கிறது. ஹோலியின் வண்ணங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அளிக்கட்டும், நாம் அனைவரும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கு ஒருங்கிணைந்து பங்களிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.  

***

(Release ID: 2235066)

TV/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235096) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada , Malayalam