மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

நாட்டில் 103,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1.2 கோடி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAR 2026 12:47PM by PIB Chennai

நாடு முழுவதும் 103,000-க்கும் அதிகமான பள்ளிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கோடிக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய பள்ளி வளாகங்களிலேயே ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொண்டு உதவி செய்துள்ளது. 

இதுவரை இந்த பெரும் நடவடிக்கை 1.2 கோடி பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. 2025 செப்டம்பரில் பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் நடவடிக்கையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  மேற்கொண்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி துறைகள், மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் உள்ளிட்டவற்றுடன் ஒருங்கிணைந்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பிராந்திய அலுவலகங்களும், மாநில அலுவலகங்களும் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

இப்பணிகளுக்காக 4 ஆயிரம் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பணியை விரைவுபடுத்த மேலும் அதிக எண்ணிக்கையிலான எந்திரங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஈடுபட்டுள்ளது. மாணவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மூலம் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள் ஆகிய பயன்களைப் பெற முடியும். போட்டித் தேர்வு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளிலும் அவர்கள் பதிவு செய்ய இயலும். எனவே, மாணவர்களின் ஆதாரில் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களையும், காப்பாளர்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதுப்பித்து வருகிறது.  2025 அக்டோபர் முதல் ஓராண்டு காலத்திற்கு 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234902&reg=3&lang=1  

***

TV/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2234994) வருகையாளர் எண்ணிக்கை : 88
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam