குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கொள்கைகளை ஐஏஎஸ் அதிகாரிகள் திறம்பட அமல்படுத்த வேண்டும்- குடியரசுத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAR 2026 2:41PM by PIB Chennai

லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் 128-வது பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள மாநில குடிமைப் பணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி பணி அதிகாரிகள், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், நாட்டைக் கட்டமைக்கும் நடவடிக்கைகளில் அவர்களுடைய பங்களிப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார். அவர்கள் தற்போது மாவட்டம் அல்லது மாநில முன்னுரிமைகளுக்கு அப்பால் பொறுப்புகளை கொண்டுள்ளனர் என்று கூறினார். அவர்கள் குறிப்பிட்ட பிராந்தியத்தின் நிர்வாகிகள் அல்ல என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் நிர்வாகத் தரங்களின் பாதுகாவலராக நாடு முழுவதும் அவசியம் அதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவும் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான ஒட்டுமொத்த தொலைநோக்கு பார்வையுடன் பிரபதிலிக்க வேண்டும் என்று கூறினார்.

ஐஏஎஸ் அதிகாரிகளாக மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் கொள்கைகளை திறம்பட அமல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அதிகாரிகள் பங்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடியரசுத்தலைவர் கூறினார். வளர்ச்சியடைந்த நாடு என்பதற்கான இந்தியாவின் மாற்றம் என்பது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை சமூகத்தினர் பயனடையும்போது மட்டுமே அர்த்தமுடையதாக இருக்கும் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234485&reg=3&lang=1

TV/IR/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2234532) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam