குடியரசுத் தலைவர் செயலகம்
மகளிர் சுயமாக முடிவெடுக்கும்போதும், சுய மரியாதையுடன் வாழும்போதும் அதிகாரம் பெற்றவராகிறார்- குடியரசுத்தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAR 2026 2:08PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற அதிகாரம் பெற்ற மகளிர், வளமான தில்லி என்ற நிகழ்வில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது அனைத்துத் துறையிலும் மகளிர் சிறந்து விளங்குவதாக கூறினார். ராணுவ வீரர்களாக நாட்டின் எல்லைகளை அவர்கள் பாதுகாப்பதாக தெரிவித்தார். விஞ்ஞானிகளாக ஆய்வகங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக கூறினார். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வதாக அவர் தெரிவித்தார். அரசியல், சமூக சேவை, நிர்வாகம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் அவர்கள் புதிய உச்சத்தை அடைந்து வருவதாக கூறினார். நாடு முழுவதும் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களையும் பதக்கங்களையும் பெறும் மாணவர்களிடையே மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணும்போது உற்சாகம் அளிக்கிறது என்று தெரிவித்தார். ஆனால் மகளிர் தற்போதும் வன்முறை, பொருளாதார சமத்துவமின்மை, சமூக பாகுபாடு, உடல்நல பராமரிப்பின்மை ஆகியவற்றை எதிர்கொண்டு வருவதாக கூறினார். மகளிருக்கு அதிகாரம் அளிப்பது என்ற இலக்கை இத்தடைகளை நீக்குவதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
அவள் சுயமாக முடிவெடுக்கும்போதும், சுய மரியாதையுடன் வாழும்போதும், சம வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பை பெறும்போதும் உண்மையில் மகளிர் அதிகாரம் பெற்றவராக இருப்பார் என்று குறிப்பிட்டார்.
அதிகாரம் அளிக்கப்பட்ட மகளிர் தனது சுய வாழ்க்கையை மாற்றுவதோடு மட்டுமின்றி, சமூகம் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் போக்கை மாற்றியமைப்பதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார். மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் கல்வியையும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் மேம்படுத்துவதாக கூறினார். பிரதமரின் எரிவாயு சிலிண்டர் திட்டம் மில்லியன் கணக்கான பெண்களை புகையிலிருந்து விடுவித்து ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக தெரிவித்தார். பிரதமரின் முத்ரா கடன் திட்டம், சுய வேலைவாய்ப்புக்காக பெண்கள் கடன்பெற வழிவகுக்கிறது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234471®=3&lang=1
TV/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2234531)
வருகையாளர் எண்ணிக்கை : 13