தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்திய மக்கள் தொடர்பு கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
26 FEB 2026 3:24PM by PIB Chennai
இந்திய மக்கள் தொடர்பு கல்வி நிறுவனத்தின் வேந்தரும், மத்திய அமைச்சருமான திரு அஸ்வினி வைஷ்ணவ், புதிய கல்வி வளாகம் மற்றும் விடுதி கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தக் கல்வி நிறுவனத்தின் புதுதில்லியில் உள்ள வளாகத்தில் 57-வது பட்டமளிப்பு விழா நாளை (27.02.2026) நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். 2024-25-ம் ஆண்டில் பத்திரிகை (ஆங்கிலம், இந்தி, வானொலி & தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம், ஒடியா, உருது, மராத்தி, மலையாளம்) விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு போன்ற பாடநெறிகள், முதுகலை டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர இந்தக் கல்வி நிறுவனம் அமைந்துள்ள 6 வளாகங்களில் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் முதலிடம் பிடித்த 23 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உட்பட 35 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233058®=3&lang=1
***
TV/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2233179)
आगंतुक पटल : 68