ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பிரதமரின் யோகா விருதுக்கு 2026 மார்ச் 21க்குள் விண்ணப்பிக்கலாம் - ஆயுஷ் அமைச்சகம்

प्रविष्टि तिथि: 25 FEB 2026 4:12PM by PIB Chennai

கடந்த சில ஆண்டுகளாக யோகக் கலை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப்பார்வையின் வழிகாட்டுதலின்படி உலகளவில் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளது. யோகக்கலையில் சிறப்பாக செயல்பட்டதை அங்கீகரிக்கும் வகையிலும், இத்துறையில் விரிவான பங்கேற்பு, புதுமை கண்டுபிடிப்பு, தலைமைத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் யோகா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பிரதமரின் யோகா விருது 2026க்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு ஆயுஷ் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை www.awards.gov.in. என்ற தேசிய விருதுகளுக்கான இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு விருதுடனும் கோப்பை, சான்றிதழ், ரூபாய் 25 லட்சம் ரொக்கம் வழங்கப்படும். தேசிய சர்வதேச அளவில் தனிநபர்கள் பிரிவில் 2 விருதுகளும், நிறுவனங்கள் பிரிவில் 2 விருதுகளும் அளிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 2026 மார்ச் 21 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232674&reg=3&lang=1

***

TV/IR/RK/SH


(रिलीज़ आईडी: 2232794) आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Malayalam