மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு பன்மொழி செயற்கை நுண்ணறிவு மாதிரி

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 1:03PM by PIB Chennai

அனைவரையும் உள்ளடக்கிய, உள்ளூர் அளவில் பொருத்தமான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில், "அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு: தனிப்பட்ட, உள்ளூர், பன்மொழி செயற்கை நுண்ணறிவு அம்சம் " என்ற தலைப்பில் ஒரு அமர்வு பிப்ரவரி 20-ம் தேதி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வில் டிஜிட்டல் இந்தியாவின் பாஷினி பிரிவு, தற்போதைய செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பன்மொழி செயற்கை நுண்ணறிவு முன்மாதிரியின் நேரடி செயல்விளக்கம் இடம்பெற்றது. சிறிய, குரல் சாதனத்தில், குறைந்த இணைப்பு சூழல்களில் செயல்படும் திறன் கொண்ட, உள்ளூரில் பயன்படுத்தக்கூடிய அமைப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொது நலன் சார்ந்த உதவித் தொழில்நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இந்த சாதனம், சிறப்பானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் உள்ளது.

இந்த முன்மாதிரியை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவிடம் பாஷினி குழுவினர் வழங்கினர். "அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு" என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பன்மொழி அம்சத்துடன் பயன்படுத்தக்கூடிய இந்த செயற்கை நுண்ணறிவு தீர்வை உருவாக்குவதற்கான முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231127&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231183) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu