பிரதமர் அலுவலகம்
பிப்ரவரி 21 அன்று, ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்
திட்டம், இந்தியாவில் உயர்நிலை உற்பத்தி மற்றும் செமிகண்டக்டர் சூழலியலை மேம்படுத்தும், சம்பத்தப்பட்ட துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்
உலகளாவிய செமிகண்டக்டர் சூழலில் இந்தியாவின் வளர்ந்து வரும் மதிப்பை திட்டம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
20 FEB 2026 6:50PM by PIB Chennai
2026 பிப்ரவரி 21 அன்று மாலை 5 மணிக்கு உத்தரப்பிரதேசத்தின் யமுனை விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சித் திட்டமான இந்திய சிப் தனியார் நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுவார்.
ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலையின் உருவாக்கம், தொழில்நுட்பத் துறையில் தன்னிறைவு அடைவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. மேலும் உயர்தர மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்திக்கான நம்பகமான சர்வதேச தளமாக இந்தியாவை நிலை நிறுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும் இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது.
செமிகண்டக்டர் தொகுப்பு, சோதனை, குறியிடுதல் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றிற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3700 கோடி மதிப்பீட்டில் இந்திய சிப் தனியார் நிறுவனம், அவுட்சோர்ஸ் குறைக்கடத்தி அசெம்பிளி மற்றும் சோதனை தொழிற்சாலையை யமுனை விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் நிர்மாணிக்கும். உள்நாட்டு உற்பத்தி திறன்களை அதிகரிப்பது, இறக்குமதி நீதானே சார்பைக் குறைப்பது,
நெகிழ்தன்மை வாய்ந்த உலகளாவிய விநியோக சங்கிலிகளைக் கட்டமைப்பது போன்ற அரசின் முயற்சிகளுடன் இந்தத் திட்டம் இணைந்திருக்கிறது. செல்பேசிகள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், வாகனங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் இதர பொருட்கள் போன்ற துறைகளில் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்முயற்சியின் வாயிலாக இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலியலுக்கு புதிய உத்வேகம் கிடைப்பதுடன், புதுமைகள், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஊக்குவிக்கப்படும். பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கு இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கான நேரடியான மற்றும் மறைமுகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளில் வளர்ச்சி பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சி, சர்வதேச செமிகண்டக்டர் சூழலில் இந்தியாவின் வளர்ந்து வரும் மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், வலிமையான மற்றும் தன்னிறைவான மின்னணு உற்பத்தி சூழலைக் கட்டமைப்பதை நோக்கிய நடவடிக்கையாகவும் அமையும்.
**
TV/BR/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2231047)
வருகையாளர் எண்ணிக்கை : 6