மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா - அமெரிக்காவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 12:56PM by PIB Chennai

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-ன் ஐந்தாவது நாளான இன்று (20.02.2026), இந்தியா, முறையாக பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இணைந்தது. இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உத்திசார் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நடவடிக்கை ஆகும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்  நிகழ்வில் இரு நாடுகளிலிருந்தும் மூத்த அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முக்கிய கனிமங்கள், செமி கண்டக்டர் உற்பத்தி ஆகியவை முதல் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு வரை டிஜிட்டல் அம்சங்களைப் பாதுகாக்கும் நம்பகமான நாடுகளின் உத்திசார் கூட்டமைப்பாக பாக்ஸ் சிலிக்கா கருதப்படுகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா வெறும் உச்சிமாநாட்டை நடத்தவில்லை எனவும் எதிர்காலத்தை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். இளைய தலைமுறையினருக்கு புதிய அடித்தளங்களும் புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

விழாவில் பேசிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி, சுற்றுச்சூழல் துறையின் துணைஅமைச்சர் திரு ஜேக்கப் ஹெல்பெர்க், இந்த அறிவிப்பு "வெறும் காகித ஒப்பந்தம் அல்ல எனவும், மாறாக பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரு செயல்திட்டம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மின்னணுவியல் துறை செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு செர்ஜியோ கோர், மைக்ரான் டெக்னாலஜியின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ராடாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரந்தீர் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230648&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230748) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam