பிரதமர் அலுவலகம்
தில்லியில் நடைபெற்ற வருடாந்தர என்சிசி பிரதமர் பேரணியின் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JAN 2026 9:02PM by PIB Chennai
தில்லியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற வருடாந்தர என்சிசி பிரதமர் பேரணியின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். என்சிசி தின விழாவில் பங்கேற்றோருக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர், நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்ற என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், அலங்கார ஊர்திக் கலைஞர்கள், தேசிய அரங்கக் கலைஞர்கள் மற்றும் இளைஞர்களின் முயற்சிகள் அவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் தெளிவாக தெரிந்தன.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
“இளம் இந்தியாவின் இளைஞர் சக்தியில் அபரிமிதமான நம்பிக்கையை உலகம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கைக்கான காரணம் தாய்நாட்டின் மீதான அளவற்ற பக்தியும் பணியில் இணையற்ற அர்ப்பணிப்பும் ஆகும்.”
***
(Release ID: 2219804)
AD/SMB/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2230166)
வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam