மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்தியாவில் 2.5 லட்சம் பேர் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான உறுதிமொழியை ஏற்றது கின்னஸ் உலக சாதனையாக அமைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2026 4:09PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டது கின்னஸ் உலக சாதனையாக அமைந்துள்ளது. இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சிமாநாட்டையொட்டி நடத்தப்பட்ட இந்த உறுதிமொழியை பிப்ரவரி 16 மற்றும் 17-ம் தேதிகளில் 2,50,946 பேர் எடுத்துக்கொண்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்தியா ஏஐ தாக்க உச்சிமாநாட்டின்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், கின்னஸ் உலக சாதனை தீர்ப்பாளர் திரு பிரவீன் படேல் உள்ளிட்டோர் முன்னிலையில் இது அறிவிக்கப்பட்டது.
இண்டல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பிப்ரவரி 16 அன்று நாடு தழுவிய ஏஐ பொறுப்பு உறுதிமொழி இயக்கம் தொடங்கியது. aipledge.indiaai.gov.in என்ற இணையப் பக்கம் மூலம் செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடனும், பொறுப்புடனும் பயன்படுத்துவது என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட இரண்டரை லட்சம் மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். இது நாட்டிற்கான பெருமையான தருணம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229622®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229840)
வருகையாளர் எண்ணிக்கை : 9