சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று 3 சிறுத்தைப் புலிக் குட்டிகளை ஈன்றுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 11:01AM by PIB Chennai

குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று 3 சிறுத்தைப் புலிக் குட்டிகளை ஈன்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு யாதவ், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த காமினி என்னும் சிறுத்தை 2-வது முறையாக குட்டிகளை ஈன்றுள்ளதாகக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இந்த சிறுத்தைப் புலி கொண்டுவரப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்தக் குட்டிகளை ஈன்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் பிறந்த சிறுத்தைக் குட்டிகளின் எண்ணிக்கை தற்போது 27 ஆக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனுடன் சேர்த்து தற்போது இந்தியாவில் மொத்தம் 38 சிறுத்தைப் புலிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229450&reg=3&lang=1

***

AD/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229555) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Malayalam