பிரதமர் அலுவலகம்
சோம்நாத்தின் காலத்தால் அழியாத முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
09 JAN 2026 9:37PM by PIB Chennai
சோம்நாத்தின் காலத்தால் அழியாத முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் ஆன்மீக பலம் மற்றும் காலத்தால் அழியாத தெய்வீகத்தை அது உட்பொதிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோமநாதர் ஆலயம் என்பது புனிதக் கோயிலாக திகழ்வது மட்டுமின்றி இந்தியாவின் நாகரீக தொடர்ச்சியின் கலங்கரை விளக்கமாகவும் விளங்குகிறது. உண்மை, உறுதித்தன்மை, ஒற்றுமை என்ற செய்தியின் மூலம் பல தலைமுறைகளை ஈர்த்து வருகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
“உயிரினங்களின் ஒவ்வொரு அணுவிலும் பகவான் ஸ்ரீ சோமநாதர் உறைந்திருக்கிறார். தொன்மைக் காலத்திலிருந்து அவர் மீதான நம்பிக்கை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்திய ஆன்மீக சக்தியின் அடையாளமாக அவர் எப்போதும் இருப்பார்.”
***
Release ID: 2213106
AD/SMB/LDN/KR
(रिलीज़ आईडी: 2229445)
आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam